அடுத்த ஆண்டு இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யப்படும் என அறிவிப்பு..?

செமிகண்டக்டர்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த 6 முதல் 8 மாதங்களில் செமிகண்டக்டர் உற்பத்தியாளர்களுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெள்ளிகிழமை தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் செமிகான் இந்தியா 2022 மாநாடு நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தொடங்கி வைத்த இந்த மாநாடு மூன்று நாட்கள் நடைபெறும். இந்த மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், அடுத்த ஏப்ரல் அல்லது மே மாதத்திற்குள் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உலகளாவிய மின்னணு மற்றம் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதே எங்களது நோக்கம். இந்தியாவில் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே பேப் அமைக்க ஐந்து உலகளாவிய செமிகான் நிறுவனங்களிடம் இருந்து இந்தியா மூதலீட்டு முன்மொழிவுகளை பெற்றுள்ளது. டிஸ்ப்ளே மற்றும் செமிகண்டக்டர் உற்பத்திக்கான கிரீன்ஃபீல்ட் பிரிவில் இதுவரை 20.5 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த மாநாட்டில் பேசிய மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், 1.53 லட்சம் கோடி மூதலீட்டில் எலக்ட்ரானிக் சிப் மற்றும் டிஸ்ப்ளே உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்காக ஐந்து நிறுவனங்களிடமிருந்து அரசு பரிந்துரைகளை பெற்றுள்ளது. வேதாந்தா பாக்ஸ்கான் JV, IGSS வென்ச்சர்ஸ், ISMC ஆகியவை 13.6 பில்லியன் டாலர் மூதலீட்டில் சிப் உற்பத்தி ஆலைகளை அமைக்க முன்மொழிந்துள்ளன.

மேலும் அவை 76,000 கோடி செமிகான் ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் 5.6 பில்லியன் டாலர் ஆதரவை கோரியுள்ளன. இதுதவிர வேதாந்தா மற்றும் எலெஸ்ட் அகியவை 6.7 பில்லியன் டாலர் மூதலீட்டில் மொபைல் போன்கள் மற்றும் கணினிகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் டிஸ்ப்ளே அலகுகளை அமைக்க முன்மொழிந்துள்ளன.

இந்தியாவில் டிஸ்ப்ளே அலகுகளை அமைப்பதற்கான திட்டத்தின் கீழ் இந்நிறுவனங்கள் மத்திய அரசிடம் 2.7 பில்லியன் டாலர் ஆதரவை கோரியுள்ளனர். குறைகடத்திகளுக்கான ஊக்கத்திட்டத்தின் கீழ் அடுத்த நான்கு ஆண்டுகளில் 1.7 லட்சம் கோடி முதலீடுகள் மற்றும் 1.35 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

Also Read: இலங்கைக்கு 600 பில்லியன் டாலர் கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல்..?

இதுதவிர SPEL செமிகண்டக்டர், HCL சிர்மா டெக்னாலஜிஸ் மற்றும் வேலான்கனி எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் செமிகண்டக்டர் பேகேஜிங்கிற்கு பதிவு செய்துள்ளன. ருட்டன்ஷா இன்டர்நேஷனல் ரெக்டிபையர் கலவை குறைகடத்திகளுக்காக பதிவு செய்துள்ளன. டெர்மினஸ் சர்கீயூட்ஸ், டிரிஸ்பேஸ் டெக்னாலஜிஸ் மற்றும் கியூரி மைக்ரோஎலக்ட்ரானிக்ஸ் ஆகியவை ஊக்க திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை சமர்பித்துள்ளன.

மேலும் இந்த மாநாட்டில் உலகின் மிகப்பெரிய செமிகண்டக்டர் டிஸ்ப்ளே உற்பத்தியாளரான அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனம், இந்தியாவில் 1800 கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் பெங்களுரில் ஒரு பெரிய நிலத்தை அந்நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.

Also Read: சீனாவின் சியோமி நிறுவனத்தின் 5,551 கோடி ரூபாய் சொத்துக்களை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை..?

குவால்காம் மற்றும் C-DAC இடையே செமிகண்டக்டர் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் இந்திய நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டாடா குழுமம் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி அமைச்சகத்துடன் சில கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.