பிரதமரின் புகைப்படத்தை பயன்படுத்த ஏன் வெட்கப்படுகிறீர்கள்.. கேரள உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..

கோவிட் – 19 தடுப்பூசி போடப்பட்ட குடிமக்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் ஒட்டப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மனுதாரருக்கு கேரள உயர்நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வி.குன்கி கிருஷ்ணன், அவர் நம்முடைய பிரதமர், வேறு நாட்டின் பிரதமர் கிடையாது. பிரதமர் நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். உங்களுக்கு வெவ்வேறு அரசியல் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அவர் இன்னும் நம்முடைய பிரதமர்.

பிரதமரின் புகைப்படத்தை வைத்துக்கொள்ள ஏன் வெட்கப்படுகிறீர்கள்? அவர் நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரின் புகைப்படம் தடுப்பூசி சான்றிதழில் இருப்பதில் என்ன தவறு இருக்கிறது? 100 கோடி மக்களுக்கு இதில் பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை. ஆனால் உங்களுக்குமட்டும் ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மனுதாரர் தரப்பில், மற்ற நாடுகளில் வழங்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழில் அந்தந்த பிரதமர்களின் புகைப்படம் இல்லை என மனுதாரர் தரப்பில் சுட்டிகாட்டப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதிமன்றம், அவர்கள் தங்கள் பிரதமரை பற்றி பெருமிதம் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் நாம் நம்முடைய பிரதமரை பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். உங்கள் தடுப்பூசி சான்றிதழில் உங்கள் பிரதமரின் புகைப்படம் இருப்பதால் நீங்கள் பெருமைபட வேண்டும் என நீதிபதி கூறினார்.

அதற்கு மனுதாரர் தரப்பில், ஒருவர் பெருமைப்பட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது தனிப்பட்ட விருப்பம் என வாதிட்டார். அதற்கு பதிலளித்த நீதிமன்றம், மனுதாரர் ஒரு பிரதமரின் பெயரிடப்பட்ட டெல்லி ஜவஹர்லால் நேரு தலைமைத்துவ நிறுவனத்தில் மாநில அளவிலான முதன்மை பயிற்சியாளராக இருப்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார். அந்த பெயரையும் அகற்றுமாறு நீங்கள் ஏன் பல்கலைக்கழகத்தை கேட்கக்கூடாது?

Also Read: பூர்வாஞ்சல் ஆறுவழிச்சாலையை நாட்டு அர்பணித்தார் பிரதமர் மோடி.. போர் விமானங்கள் தரை இறங்கி சாகசம்..

இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அஜித் ஜாய், தடுப்பூசி சான்றிதழ் என்பது அவரது தனிப்பட்ட இடம், அதில் அவருக்கு சில உரிமைகள் உள்ளன. தடுப்பூசி போட்டதற்காக மனுதாரர் பணம் செலுத்தி இருக்கிறார். அதனால் அவருக்கு வழங்கப்பட்ட சான்றிதழில் பிரதமரின் புகைப்படத்தை ஒட்டி அதன் மூலம் பயன் பெற அரசுக்கு உரிமை இல்லை என வாதிட்டார்.

Also Read: மணிப்பூரில் உலகிலேயே மிக உயரமான இரயில் தூண் பாலத்தை கட்டமைத்து வரும் இந்தியன் ரயில்வே..

காமன் காஸ் வெர்சஸ் யூனியன் ஆஃப் இந்தியா என்ற பொதுபணத்தை பயன்படுத்தி பிரசாரம் செய்வதற்கு உச்பநீதிமன்றம் வகுத்துள்ள விதிகளின்படி, எந்த ஒரு தனிநபரும் ஒரி முன்முயற்சியை தொடங்குவதற்கு வரவு வைக்கவோ அல்லது ஒரு குறிப்பிட்ட சாதனைகளுக்கு சொந்தம் கொண்டாடவோ முடியாது. இதில் பிரதமரும் அடங்குவார் என மனுதாரர் வழக்கறிஞர் வாதிட்டார்.

Also Read: இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார் முன்னாள் ஷியா வக்ஃப் வாரிய தலைவர்..

மேலும் இதுபோன்ற புகைப்படங்களை பயன்படுத்துவது வாக்காளர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறினார். மனுதாரரின் வாதத்தை தொடர்ந்து இறுதியாக நீதிமன்றம், மனுக்களை விரிவாக ஆராய்ந்து அதனை தள்ளுபடி செய்வதற்கு முன் ஏதேனும் தகுதி உள்ளதா என்பதை முடிவு செய்வோம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.