இந்திய இராணுவத்திற்கு குளிர்கால ஆடை.. தயாரிப்பு தொழிற்நுட்பத்தை இந்திய நிறுவனங்களுக்கு வழங்கிய DRDO..

இந்தியாவின் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்திற்கு ஒரு பெரிய ஊக்கமாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உள்நாட்டு தீவிர குளிர் கால ஆடை அமைப்புக்கான தொழிற்நுட்பத்தை (ECWCS) ஐந்து இந்திய நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.

இந்த ஐந்து நிறுவனங்களும் இந்திய இராணுவ தேவையை பூர்த்தி செய்வதோடு மற்ற நாடுகளுக்கு ஊற்றுமதி செய்வதையும் நோக்கமாக கொண்ட ராணுவ தரம் வாய்ந்த குளிர் காலநிலை ஆடை அமைப்பை தயாரிக்கும். பனிப்பாறை மற்றும் இமயமலை சிகரங்களில் அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்கு இந்திய இராணுவத்திற்கு தீவிர குளிர் காலநிலை ஆடை அமைப்பு முக்கியமாக தேவைப்படுகிறது.

மேலும் இதுவரை இராணுவம் அதிக உயரமான பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள துருப்புகளுக்காக கடுமையான குளிர்கால ஆடைகள், பல சிறப்பு ஆடைகள் மற்றும் மலையேறும் உபகரணங்களை இறக்குமதி செய்தே பயன்படுத்தி வருகிறது.

DRDO வடிவமைத்த இந்த மூன்று அடுக்குகள் கொண்ட தீவிர குளிர் காலநிலை ஆடை அமைப்பு +15 டிகிரி மற்றும் -50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரம்பில் வெவ்வேறு அடுக்குகளின் கலவைகள் மற்றும் உடல் உழைப்பின் தீவிரம் ஆகியவற்றுடன் பொருத்தமான வெப்பக்காப்பு (Thermal Insulation) வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த உள்நாட்டு தீவிர குளிர் கால ஆடை அமைப்புக்கான தொழிற்நுட்பத்தை (ECWCS) பாதுகாப்புத்துறை செயலாளர் மற்றும் DRDO தலைவருமான ஜி சதிஷ் ரெட்டி டெல்லியில் திங்கள் அன்று ஐந்து இந்திய நிறுவனங்களுக்கு வழங்கினார். அமைச்சகத்தின் கூற்றுப்படி, ECWCS ஆனது சுவாச வெப்பம், நீர் இழப்பை குறைத்தல், தடையற்ற இயக்கம் மற்றும் வியர்வையை விரைவாக உறிஞ்சுதல் மற்றும் வாட்டர் ப்ரூஃப் ஆகியவற்றை வழங்கும் போது, போதுமான சுவாசம், மேம்பட்ட காப்பு மற்றும் தேவையான வலிமை அம்சங்களை தருகிறது.

Also Read: அதிவேக வான்வழி இலக்கு HEAT அபயாஸ் ட்ரோன் சோதனையை வெற்றிகரமாக நடத்திய DRDO..

இமயமலை சிகரங்களில் பரவலாக ஏற்ற இறக்கமான வானிலை நிலவரங்களை கருத்தில் கொண்டு, தற்போதைய காலநிலை நிலைமைகளுக்கு தேவையான இன்சுலேஷன் அல்லது IREQ வை பூர்த்தி செய்ய ஆடைகள் குறைவான சேர்க்கைகளை வழங்குகிறது. நிகழ்ச்சியில் பேசிய ரெட்டி, இராணுவத்தின் தற்போதைய தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யாமல் ஏற்றுமதி செய்யவும் உள்ளதாக தெரிவித்தார்.

Also Read: நடுவானில் பாதையை மாற்றும் குறுகிய தூர பிரலே ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..

மேலும் சிறப்பு ஆடைகள் மற்றும் மலையேறும் உபகரணங்களுக்கான உள்நாட்டு தொழில் தளத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை ரெட்டி வலியுறுத்தினார். சமீபத்தில் DRDO எல்லை கண்காணிப்பு அமைப்பின் தொழிற்நுட்பத்தை பராஸ் பாதுகாப்பு விண்வெளி தொழிற்நுட்ப நிறுவனத்திடம் ஒப்படைத்தது. இந்த தொழிற்நுட்பம் எல்லை பகுதிகளை இரவும் பகலும் என அனைத்து காலநிலைகளிலும் கண்காணிக்க முடியும்.

Also Read: சீனாவின் உதவியுடன் பாலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்கி வரும் சவுதி அரேபியா..?

Leave a Reply

Your email address will not be published.