யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு..

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு டெல்லி நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக யாசின் மாலிக்கிற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என NIA கோரியிருந்தது. மாலிக்கிற்கு உதவ நீதிமன்றத்தால் நியமிக்கப்பட் அமிக்கஸ் கியூரி, இந்த வழக்கில் யாகின் மாலிக்கிற்கு குறைந்த பட்ச தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கோரினார். பின்னர் நீதிமன்றம் தண்டனை உத்தரவை மதியம் 3.30 வரை ஒத்திவைத்தது.

மே 19 அன்று பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்கில், சிறப்பு நீதிபதி பிரவீன் சிங், யாசின் மாலிக் குற்றவாளி என தீர்ப்பளித்தார். அபராத தொகையை தீர்மானிக்க அவரது நிதி நிலைமையை மதிப்பீடு செய்ய தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

விசாரணையின் போது பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்த வழக்கில் UAPA உட்பட அனைத்து குற்றசாட்டுகளையும் யாசின் மாலிக் ஒப்புக்கொண்டார். விசாரணையின் அடுத்த தேதிக்குள் யாசின் மாலிக் தனது நிதி நிலைமையை குறித்த பிரமாண பத்திரத்தை சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.

Also Read: NIA அதிகாரியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு..

யாகின் மாலிக் மீது இந்திய தண்டனை சட்டம், UAPA பிரிவு 16 (பயங்கரவாத செயல்), பிரிவு 17 (பயங்கரவாத செயலுக்கு நிதி திரட்டுதல்), பிரிவு 18 (பயங்கரவாத செயலுக்கான சதி), பிரிவு 20 (பயங்கரவாத கும்பல் அல்லது அமைப்பின் உறுப்பினராக இருப்பது), மற்றும் பிரிவுகள் 120-B (குற்றச்சதி), 124-A (தேசத்துரோகம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

Also Read: சட்டம் ஒழுங்கு சீர்கேடு: பஞ்சாபிற்கு துணை ராணுவத்தை அனுப்ப DGP கோரிக்கை..

Leave a Reply

Your email address will not be published.